இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருப்பவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட இதுவரை 60 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் 1974ஆம் நாளில் லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘திக்கற்ற பார்வதி’ படம் மூலம் அறிமுகமானார். பின்பு ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தான் இந்தியாவின் முதல் மௌன படம், டைம் டிராவல் படங்களை இயக்கியவர். இவருக்கு 2024ஆம் ஆண்டு ‘அபூர்வ சிங்கீதம்’ என்ற தலைப்பில் கமல், பாராட்டு விழா எடுத்திருந்தார். 94 வயதாகியிருக்கும் இவர், தனது 61வது படத்தை இயக்கவுள்ளார்.
இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இதன் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 94வது வயதில் ஓயாமல் படம் இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/20-51-2026-02-02-11-23-02.jpg)