விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை(09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் படம் தள்ளிபோவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் புது ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சான்றிதழ் வழங்காதது தொடர்பாக அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் வட்டாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் திரைத்துறை கஷ்டமாப்ன காலத்தில் இருப்பதாக விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் சிபி சத்யராஜ், ரவி மோகன் உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும்
இந்த நிலையில் சிம்பு தற்போது விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் விஜய் அண்ணா. பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜன நாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us