ஜனநாயகன் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காத காரணத்தினால் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாவில்லை. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகத் தணிக்கை வாரியம் மற்றும் படக்குழு ஆகிய இருதரப்பிற்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வந்ததையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து ஏற்படும் இந்த சிக்கல்களுக்கு, அரசியல் காரணங்களும் இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு ஆதரவாகத் திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் சிம்புவும் டிவீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சிம்புவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “எனக்கு அரசியலும் தெரியாது, அதில் அனுபவமும் கிடையாது. அவர் இத்தனை ஆண்டுகளாகத் திரையுலகிலிருந்து வருகிறார். ஜனநாயகன் அவரது கடைசி படம், எனவே அப்படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த டிவீட் செய்தேன். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப்பற்றிப் பேசுவதற்கு நான் சரியான ஆளும் கிடையாது. அவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
சிம்பு தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொட்டே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Follow Us