அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை உருவாக்கி துபாய் முதல் போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் துபாய் மற்றும் ஸ்பெய்னில் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருந்தார். மற்ற போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மலேசியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கிறார். அங்கு அஜித்துடன் இயக்குநர் சிறுத்தை சிவாவும் ஏ.எல்.விஜய்யும் இடன் இருக்கின்றனர். இதில் சிறுத்தை சிவா அஜித்தின் கார் ரேஸ் அணிக்கு விளம்ர படமும் விஜய் அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஆவணப் படமாகவும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தை சிம்பு சந்துள்ளார். கார் ரேஸ் சர்க்யூட்டில் அஜித்தின் ரேஸின் அனியின் ஜெர்சியை அணிந்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார். இவர் இன்று ம் மலேசியாவில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அதை முடித்துவிட்டு அஜித்தை சந்தித்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/12-14-2025-12-06-19-22-05.jpg)