Advertisment

“கிளாசிக் படம்... என்னுடைய ஸ்பெஷல்...” - சிம்பு வாழ்த்து

10 (58)

சமீப காலங்களாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் பலரும் தங்களது படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றன. அந்த வகையில் ரீ ரிலீஸ் செய்வதற்காகவே டி ராஜேந்திர் ‘டி.ஆர். டாக்கீஸ்’ என்ற புது நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கியிருந்தார். முதல் படாக ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை கடந்த செப்டம்பரி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் செய்யவில்லை. 

Advertisment

இந்த சூழலில் அப்படம்  43 வருடங்​களுக்​குப் பிறகு 4கே டிஜிட்​டல் தொழில்நுட்பத்​தில் நாளை ரீ ரிலீஸாகிறது. இப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கி நடித்திருந்தார். மேலும் தயாரித்து இசையும் அமைத்திருந்தார். இதில் நளினி நாயகி​யாக நடித்திருக்க கங்​கா, ராதா ரவி, எஸ்​.எஸ்​.சந்​திரன், கவுண்​டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்​தனர். 1983-ம் ஆண்டு வெளி​யான இப்​படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisment

09 (34)

இந்த நிலையில் சிம்பு இப்படம் ரீ ரிலீஸ் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இப்படத்தின் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகள், சிறப்புவாய்ந்த நடிப்புகள் மற்றும் மறக்க முடியாத இசைகள்... இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியிலும் என்னிடத்திலும் தொடர்ந்து ஒரு ஸ்பெஷல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கிளாசிக் படம் மீண்டும் ஒருமுறை அதன் தகுதிக்கேற்ப கொண்டாடப்படட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

T Rajendar actor simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe