சரவணன் இயக்கத்தில் சிம்பு, சினேகா, சனாக்கான், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம் சிலம்பாட்டம். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் சிலம்பரசன் இரண்டு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். மேலும் சந்தானம் நெடுமுடி வேணு, பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிஷோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Advertisment

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த சூழலில் இப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதாவது சிம்புவின் பிறந்தநாள் பிப்ரவரி 3 என்பதால் அதனை முன்னிட்டு பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் 18ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாவதால் படத்தை வரவேற்க ஆவலுடன் இருக்கின்றனர்.

Advertisment

சமீபத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால் அதில் வெளியாகும் படங்களும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. அந்த வகையில் கில்லி, படையப்பா, மங்காத்தா படங்களைத் தொடர்ந்து இப்படம் இருக்குமா என்பது சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.