தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் கடைசியாக ‘கூலி’ படத்தில் நடித்திருந்தார். இப்போது மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் ‘ட்ரெயின்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மூன்று படங்களை வைத்துள்ளார்.
இதனிடையே 2018 முதல் 2020 வரை எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். அதே சமயம் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலுடன் அவர் இருந்த காதல் முறிவுக்கு வந்தது. இந்த சிறு இடைவெளி குறித்தும் காதல் முறிவு குறித்தும் தற்போது ஒரு ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “அந்த இடைவெளியில் என்னுள் இருக்கும் சிறப்பான விஷயங்கள் வெளியே வந்தது. அவரைப் பிரிந்தது தான் சோகமான இருந்தது. ஆனால் மற்ற விஷயங்கள் அனைத்தும் உண்மையிலேயே சிறப்பாக அமைந்தது.
நான் யார் என்பதை அறிந்து கொண்ட அற்புதமான நேரம் இது. அதேபோல் எனக்குள் இருந்த சில மனநிலை பிரச்சனைகளையும் சரி செய்ய உதவியது. ஆனால் நான் கடுமை​யான பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன். அந்த பதற்​றத்தால் அன்​றாட நடவடிக்​கைகளில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை. அதனால் லண்டனில் இருந்து இசை​யின் மூலம் என்னை நான் மீண்​டும் கண்​டறிந்​தேன்.
தின​மும் என் உடைகளை நானே துவைப்​பது, எனக்​கான உணவை நானே சமைப்​பது, மெட்ரோ ரயி​லில் பயணிப்​பது, திரும்பி வந்து புதி​தாக எழுதப் பயிற்சி செய்​வது, பின்​னர் எந்த எதிர்​பார்ப்​பும் இல்​லாமல் அந்த இசையைச் சோதித்​துப் பார்ப்​பது என என் வாழ்க்​கையை அமைத்​திருந்​தேன். அதனை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார்.
Follow Us