தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகள் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் நாயகியை தாண்டி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். 

Advertisment

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது மெட்ரோ சிரிஷ் நடிக்கும் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவரது பெயர் வாட்ஸ் அப்பில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவரது பெயரில் இருக்கும் ஒரு வாட்ஸ் அப் நம்பர் போலியானது என ஸ்ரேயா தெரிவித்துள்ளார். அந்த நம்பரின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்ரேயா, இதை நிறுத்தங்கள் என அந்த மர்ம நபரை கேட்டுக்கொண்டுள்ளார். 

Advertisment

அந்த பதிவில், “தயவு செய்து மக்களிடம் பேசுவதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள். ஆள் மாறாட்டம் செய்யாமல் ஒரு வாழ்க்கையை உருவாக்க தொடங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் “மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இந்த மோசமான நபர் நான் போற்றும் மற்றும் நடிக்க விரும்பும் நபர்களை அணுகுகிறார். அது நான் இல்லை. அந்த நம்பரும்  என்னுடையது இல்லை” என தெளிவுபடுத்திய அவர், யார் இந்த முட்டாள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் அதிதி ராவும், தனது பெயரில் வாட்ஸ் அப்பில் போலி நம்பர் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.