இயக்குநர் பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டார்க் இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்வில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது, “இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள்  எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. 

Advertisment

இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி” என்றார்.