பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்று உலக அளவில் ரூ.800க்கும் மேலான கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘ஈதா’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் புகழ்பெற்ற நடன கலைஞர், பாடகர் மற்றும் நடிகையான வித்தாபாய் பாவ் மாங்க் நாராயண் கோன்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா நாசிக்கில் நடந்து வந்தது. இதில் நடனக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஷ்ரத்தா கபூர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் ஷ்ரத்தா கபூர் குணமடைவார் என சொல்லப்படுகிறது.
Follow Us