இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினியை வைத்து கூலி படம் இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையை அனிருத் கவனிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு சமீத்தில் ஒரு முன்னோட்டத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் படம் குறித்து பேசிய அல்லு அர்ஜூன், படத்தின் கதை மனதிலே நிற்பதாகவும் படப்பிடிப்பிற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு லோகேஷுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும் அனிருத்துடன் இறுதியாக இணைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/15-54-2026-01-29-17-23-54.jpg)
இந்த நிலையில் படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூர், இதுவரை பாலிவுட்டில் மட்டும் தான் நடித்துள்ளார். மற்ற மொழிகளில் நடித்ததில்லை. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் முதல் முறையாக மற்ற மொழி படத்தில் நடிப்பார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us