பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் தற்கொலை செய்து கொண்டாதாக பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இந்த தற்கொலை இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அதை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி கொடுத்ததாகவும் பாலிவுட்டில் நெப்போசிட்டத்தால் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டதாகவும் உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

Advertisment

இந்த மரணம் தொடர்பாக மும்பை காவல்துறை, அமலாக்கத்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு என பல்வேறு துறைகளில் விசாரணைகள் நடந்தது. இதில் அணைத்து விசாரணையிலும் சுஷாந்த் சிங் மரணத்தில் எந்த சதித்திட்டமும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்பு சமீபத்தில் நடிகை ரியா மீது சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் குற்றம் சுமத்திய வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. அதிலும் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் இதனை சுஷாந்த் சிங் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தனர். 

Advertisment

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங், தனது சகோதரர் இரண்டு நபர்களால் செய்யப்பட்டுள்ளார் என ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், “ஒருவர் மின்விசிறியால் தற்கொலை செய்ய முயற்சித்தால் ஸ்டூலை பயன்படுத்துவார்கள். ஆனால் சுஷாந்த் சிங் இருந்த அறையில் ஸ்டூலே இல்லை. அதுபோக அவரது உடலில் துணியால் தூக்கு போட்ட அடையாளங்கள் தெரியவில்லை. சங்கிலி போன்ற அடையாளம் தான் தெரிந்தது. சம்பவம் தொடர்பாக அமெரிக்காவிலிருந்து ஒரு மனநோய் சார்ந்த நிபுணர் என்னை தொடர்பு கொண்டார். அவர் சுஷாந்த் சிங் இரண்டு நபர்களால் கொலை செய்யப்பட்டதாக சொன்னார். இதே போன்று மும்பையில் இருந்த ஒரு மனநோய் சார்ந்த நிபுணரும் என்னை தொடர்பு கொண்டு சுஷாந்த் சிங் இரண்டு நபர்களால் கொலை செய்யப்பட்டார் என்றார். ஒரே விஷயத்தை இரண்டு பேர் எப்படி சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார். சுஷாந்த் சிங் மறைந்து 5 ஆண்டுகள் கடந்தும் அவரது மரணம் தொடர்பான விவாதம் தொடர்ந்து அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது.