Advertisment

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

16 (13)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகம், அண்ணா அறிவாலயத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.   

Advertisment

அதே போன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே சமயம் கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நக்கீரன் அலுவலகம், தவெக தலைவர் விஜய்யின் வீடு, பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதனிடையே திரைப்பிரபலங்கள் வீட்டிற்கும் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்கிறது. 

Advertisment

இதுவரை அஜித், நடிகைகள் திரிஷா, நயன்தாரா, நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அருண் விஜய், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீட்டிற்கு மிரட்டல் வந்துள்ளது. அனைத்து வீட்டிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்ட நிலையில் அது புரளி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்ட மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து அந்த வீட்டிற்கு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சென்றனர். இப்போது சோதனை நடந்து கொண்டு வருகிறது. அதேபோன்று இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார்ல், எஸ் ஏ சந்திரசேகர், நடிகைகள் பிரியா பவானி சங்கர், சாக்‌ஷி அகர்வால் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

Chennai bomb threat Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe