Advertisment

‘ஜெயிலர் 2’; அவசரப்பட்ட சிவ ராஜ்குமார்!

18 (58)

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

Advertisment

மேலும் ஷாருக்கான், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடிப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து சமீபத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியானது. 

Advertisment

இந்த நிலையில் சிவ ராஜ்குமார், இப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, ரஜினிகாந்துடன் தனக்கு ஒரு வலுவான உறவு இருப்பதாகவும், எஸ்.ஜே. சூர்யாவின் நகைச்சுவை படப்பிடிப்பை உற்சாகமாக வைத்திருப்பதாகவும் கூறினார். இதன் மூலம் படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இதுவரை படக்குழு எஸ்.ஜே.சூர்யா நடிப்பதை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe