இந்த நிலையில் தமிழ்நாடு வருகை தந்த சிவ ராஜ்குமார், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அடுத்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் நடித்துள்ள 45 படம், டிசம்பரில் பல மொழிகளில் ரிலீஸாகிறது . பெடி மற்றும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருக்கிறது” என்றார்.
ரஜினியின் ஆன்மீகம் தொடர்பான கேள்விக்கு, “எல்லாருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. எங்கே நிம்மதி கிடைக்கிறதோ அங்கு செல்கின்றனர். ரஜினியும் அப்படித்தான். அவர் ஒரு தனித்துவமானவர்” என்றார். விஜய்யின் அரசியல் தொடர்பான கேள்விக்கு, “அரசியலில் விஜய் வந்த பிறகு அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் தமிழ்நாடு அரசியல் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஸ்டாலின் சாரையும் அவரது மகனையும் நன்றாகத் தெரியும். எல்லா கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். விஜய், மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என நினைக்கிறார். அவர் என்ன முடிவெடுத்தாலும் யோசித்து நிதானமாக எடுக்க வேண்டும். இதை சக நடிகராகவும் சகோதரனாகவும் சொல்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். மத்தியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது” என்றார்.