ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிராணியின் டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஜவான் படத்திற்காக முதல் முறையாக தேசிய விருதை பெற்றிருந்தார்.  

Advertisment

இந்த நிலையில ஷாருக்கான் எக்ஸ் வலைதளத்தில் ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் ‘உங்கள் பிறந்தநாளுக்காக நாங்கள் மும்பை வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு ரூம் கிடைக்கவில்லை. உங்கள் மன்னத் வீட்டில் ரூம் கிடைக்குமா சார்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், “இப்போது எனக்குக் கூட அங்கு ரூம் இல்லை. நான் இப்போது வாடகைக்கு தான் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

ஷாருக்கானின் அறுபதாவது பிறந்த நாள் நவம்பர் இரண்டாம் தேதி வருகிறது இதனை முன்னிட்டு பிவிஆர் நிறுவனம் வரும் நாளை முதல் இரண்டு வாரத்திற்கு சாருக் கானின் வெற்றி படங்கள் ஆன கபி கான் கபினா தில் சே தேவதாஸ் ஜவான் ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட சில படங்கள் 30 மாநகரங்களில் திரையிடப்படுகிறது

ஷாருக்கானின் வீடு மும்பையில் பந்தா பகுதியில் இருக்கிறது அந்த வீட்டிற்கு மன்னர் என பெயரிட்டு அவர் அங்கு வசித்து வந்தார் ஆனால் அந்த வீட்டில் மேலும் இரண்டு மாடியில் கட்டப்பட்டு வருவதால் கடந்த மே மாதம் முதல் மண்ணைத் வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறி வேறொரு வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment