Advertisment

முதலில் மன்னிப்பு... பின்பு மகிழ்ச்சி செய்தி... - ஷாருக்கானின் அறிவிப்புகள்

20 (8)

பிரபல நடிகரான ஷாருக்கான் நேற்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். வழக்கமாக அவரது பிறந்தநாளில் மும்பையில் அவரது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார். அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்வார். ஆனால் இந்த முறை கூடி இருந்த ரசிகர்களை அவரால் சந்திக்க முடியவில்லை. 

Advertisment

அது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், “எனக்காகக் காத்திருந்த அன்பான மக்களே... உங்களை நான் வெளியே சென்று வரவேற்க முடியாது என்று அதிகாரிகள் எனக்கு அறிவித்துள்ளனர். உங்கள் அனைவரிடமும் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பிரச்சினை காரணமாகவும் அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு. 

Advertisment

இதை புரிந்துகொண்டதற்கும் என்னை நம்பியதற்கும் நன்றி. என்னை நீங்கள் பார்க்காமல் எப்படி மிஸ் செய்வீர்களோ அதை விட உங்களை நான் பார்க்காமல் இருப்பதை அதிகம் மிஸ் செய்வேன். உங்களை பார்த்து அன்பை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். லவ் யூ ஆல்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாக மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில், “என் பிறந்தநாளை எப்போதும் போல சிறப்பாக்கியதற்கு நன்றி. சந்திக்க முடியாதவர்களை திரையரங்குகளிலும் அடுத்த பிறந்தநாளிலும் விரைவில் சந்திப்பேன். லவ் யூ” எனக் குறிப்பிட்டுள்ளார், முதலில் மன்னிப்பு கேட்ட ஷாருக்கான் பின்பு விரைவில் ரசிகர்களை சந்திப்பதாக சொல்லியுள்ளதால் ரசிகர்கள் தற்போது சற்று மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிராணியின் டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe