பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து கிங் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் ஷாருக்கானோடு அவரது மகள் சுகானாக் கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அணில் கபூர், ஜாக்கி ஷரப், ராணி முகர்ஜி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். ஷாருக்கான் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் வெளியிட்ட தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாவதாக ஒரு முன்னோட்டம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஷாருக்கான் - சித்தார்த் ஆனந்த் - தீபிகா படுகோன் கூட்டணியில் வெளியான பதான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அதே சமயம் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடை சர்ச்சையானது. காவி நிறத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக விமர்சனம் எழுந்து கடும் எதிர்ப்பை பாஜக ஆதரவாளர்களால் சந்தித்தது. இந்த சூழலில் மீண்டும் இந்தக் கூட்டணியில் படம் வெளியாகவுள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Follow Us