மறைந்த விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் கடைசியாக ‘படை தலைவன்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்தை சில காட்சிகளில் படக்குழு கொண்டு வந்திருந்தனர். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தை அடுத்து ‘கொம்பு சீவி’ என்ற தலைப்பில் சண்முக பாண்டியன் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சீமராஜா படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் கிளிம்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. அதில் உசிலம்பட்டி பின்னணியில் இப்படம் உருவாகிவருதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சரத்குமாருடன் சட்டத்துக்கு விரோதமாக செய்யும் வியாபாரத்தில் சண்முக பாண்டியனும் இணைந்துள்ளதாக தெரிகிறது. பின்பு இருவரும் செய்யும் வேலைகளை வைத்து போலீஸுக்கும் இவர்களுக்கும் மோதல் வெடிக்க இறுதியில் என்ன ஆனது என்பது குறித்து காமெடி ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. இடையில் காதல், குத்துப்பாட்டு உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெறுகின்றன. ட்ரெய்லரில் சரத்குமார் பேசும் ‘சத்ரியனா இருக்குறத விட சாணக்கியனா இருக்கனும்...’ என்ற வசனமும் சண்முக பாண்டியன் பேசும், ‘நியாயமா நாங்க ஆந்திராவுல பன்ன வேலைக்கு மாமாக்கு ஒரு பத்ம பூஷணும் எனக்கு ஒரு கலைமாமணி அவார்டும் கொடுத்திருக்கனும்’ போன்ற வசனம் ஹைலைட்டாகா அமைந்துள்ளது.
Follow Us