Advertisment

அஜித் - விஜய் இடையிலான நட்பு; மனம் திறந்த ஷாலினி.

17 (53)

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஷாலினி. தமிழில் அமர்க்களம், காதலுக்கு மரியாதையை, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக ராஜா சின்ன ரோஜா,  சங்கர் குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வந்த ஷாலினி, பின்னாளில் அஜித்தைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் சினிமாவில் இருந்து விலகினார். தற்போது இரு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷாலினி, அஜித் மற்றும் விஜய் குறித்தான நட்பு பற்றி மனம் திறந்து பேசியிருந்தார்.   

Advertisment

அதில், “அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கிடையில் ஆரோக்கியமான நட்பு உள்ளது. இருவருமே, ஒருவரின் வெற்றியைப் பார்த்து மற்றொருவர் மகிழ்ச்சியடையும் மனநிலை கொண்டவர்கள் தான். இது மிகவும் அற்புதமான விஷயம்” என்று கூறியிருந்தார். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

ACTOR AJITHKUMAR actor vijay Shalini Ajithkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe