சின்னத்திரையில் பல்வேறு சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராஜேஸ்வரி. பின்பு வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னை பாரிமுனை நகரில் தன் கணவருடன் வசித்து வந்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார். அங்கு கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மறைவு சின்னத்திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்போது சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us