சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். மேலும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் மக்களிடம் கவனம் பெற்றார். சீரியலை தாண்டி திரைப்படங்களிலும் டிமான்டி காலனி 2-வில் நடித்திருந்தார். அதன் மூன்றாம் பாகத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தாண்டி வெப் சீரிஸ், மியூசிக் வீடியோ மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2268 அடி உயரம் இருக்கும் மலை மீது ஏறி இறங்கியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதன் அனுபவத்தை பகிர்ந்து காலையிலே ஏறச் சென்று மாலைக்குள் இறங்கிவிடுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்த மலை மேல் ஏற கடந்த டிசம்பர் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி அர்ச்சனா சென்றதால் அது சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் அனுமதி பெறாமல் அர்ச்சனா சென்றதால் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/19-59-2026-01-29-12-35-40.jpg)