சினிமா டூர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி ஸ்கொயர் எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து ஒரு படம் தயாரிக்கின்றனர். இத்திரப்படத்தை தயாரிப்பாளர் சூர்யாதேவி பாபு தயாரிக்கிறார். இப்படத்தினை நக்கீரன் மற்றும் ஆனந்த் என்ற இரு இயக்குநர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இத்திரைப்படம் இரண்டு கதாநாயகர்களை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் 'அப்புச்சி கிராமம்' படத்தில் நடித்த பிரவீன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் படத்தின் தயாரிப்பளாரான சூர்யாதேவியும் நடிக்கவுள்ளார். இன்னொருவர் விரைவில் தேர்வு செய்யபடவுள்ளார்.
மேலும் ஜெயபிரகாஷ் , வினோதினி, விஜய் டிவி புகழ் தீபா, சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா டீவி கதிர், மதன், நான் மகான் அல்ல படத்தில் நடித்த மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சாம்சன் இசையமைக்கிறார். இப்படத்தினை பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் க்ளாப் அடித்து துவங்கி வைத்தார். இத்திரைப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாக இருக்கிறது. இப்படம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
Follow Us