சமீப காலமாக ரீ ரிலீஸ் ட்ரெண்ட் அதிகரித்து வருவதால் பல்வேறு ஹிட் படங்கள் மற்றும் அப்போது எதிர்பார்த்த வெற்றியை பெறாத படங்கள் இதில் இணைந்து வருகிறது. இதில் சமீபத்தில் ரஜினி நடித்த படையப்பா படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அஜித்தின் மங்காத்தா படம் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

481

இந்த நிலையில் ரீ ரிலீஸ் ட்ரெண்டில் தற்போது சீமான் இயக்கிய ‘தம்பி’ படம் இணைந்துள்ளது. சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான படம் தம்பி. இதில் நாயகியாக பூஜா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, மணிவன்னன், பிஜூ மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது. 

Advertisment

இப்போது 20 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி ஒடு புதுப் போஸ்டரும் சீமான் வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் வெளியிடத் திட்டுமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.