ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியான படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியிருந்த இப்படம் கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய ஷான் ரோல்டன், “சில படங்கள் நமக்கு பணியாக தெரியும், ஆனால் சில படங்கள் நமக்கு பொறுப்பாக தெரியும். அப்படங்களை வெறும் பணியாக மட்டும் நினைக்காமல் பதிவாகவும் நேர்த்தியாகவும் வருங்காலத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றும். இது ராஜூமுருகனுடன் நான் இணையும்போது ஒவ்வொரு முறையும் வரும்.
அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர். அவருடைய சிந்தனையும் படைப்பும் சர்ப்ரைஸாக இருக்கும். அதே மாதிரி தான் மௌ லார்ட் படத்தில் அவருக்கே உரித்தான அரசியல் நையாண்டியை ஜனரஞ்சகமாக ரசிக்கும்படியாக கொடுத்தார். இது சர்ப்ரைஸிங்காக இருந்தது. அதை பார்க்கும்போது ஒரு நண்பராகவும் சகோதரராகவும் பெருமையாக இருந்தது. அதேபோல் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி. இந்தப் படம் சமூகத்துக்கு நல்ல படம் என யோசித்து தயாரித்துள்ளார். அது இப்போது வெற்றி என்ற புள்ளியில் வந்துதிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தை காலத்தை தாண்டி நிற்கும் லிஸ்டில் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்” என்றார்.
Follow Us