கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆரை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சத்யராஜ் பேசுகையில், “எம்ஜிஆருக்கும் எனக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா என்னைவிட எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 110 தடவை நாடோடி மன்னனை தியேட்டருக்கு சென்று பார்த்திருக்கிறார். அதில் ஒரு தடவை கூட நாயகிகளின் முகத்தை அவர் பார்க்கவில்லை. அப்படிப்பட்ட தயாரிப்பாளருக்கு இந்த படம் அமைந்தது கஷ்டன். கார்த்திக்கு பருத்திவீரன் கஷ்டமான கதாபாத்திரம், ஏனென்றால் டவுனில் வளர்ந்து அமெரிக்காவில் படித்து பருத்திவீரனாக நடிப்பது மிகவும் சிரமம், ஆனால் அதை சிறப்பாக செய்துவிட்டார். ஆனால் அதைவிட இந்த படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் சிரமமானது. எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துப் பெயர் வாங்குவது ரொம்ப கஷ்டம். கார்த்தி அதை சிறப்பாக செய்திருப்பார் என நம்புகிறேன். க்ரித்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத் இருவருமே நம்பிக்கை நடிகையாக இருக்கின்றனர்.
ஆனந்தராஜ் மற்றும் சுந்தர், இருவருக்குமே இத்தனை வயதாகியும் முடி கொட்டாமல் இருக்கிறது” என்றார். உடனே ஆனந்தராஜ் சத்யராஜைநோக்கு ஓடி வந்து ‘விக்’ மட்டும் இல்லையென்றால் நாங்களும் மாடு ஒட்டி இருப்போம் என் நகைச்சுவையாக பேசினார். தொடர்ந்து பேசிய சத்யராஜ் நானும் கவுண்டமணி அண்ணனும் பேசும்போது அவர் என்னிடம் இந்த விக் மட்டும் இல்லைன்னா நாம என்ன செஞ்சுருப்போம்னு கேட்டார். நாமும் எங்கேயாவது ஊர்ல மாடு மேய்ச்சிட்டு இருந்திருப்போம்னு சொன்னேன். அதுக்கும் கணக்கு தெரியணுமே என சொன்னார். அப்படி நாங்க காமெடியா பேசிப்போம்.
நலன் குமாரசாமி, இந்த படத்தை வேறு மாதிரி டீல் செய்து இருக்கிறார். எம்ஜிஆர் பெயரை வைத்துக்கொண்டு இந்த கால ஜென்-சி இளைஞர்களும் ரசிக்கும்படி எடுத்துள்ளார். இந்த படத்தில் நடந்த ஒரு காமெடியான விஷயத்தை சொல்கிறேன். நான் சினிமாவுக்கு நடிக்க வந்தபோது அதாவது 50 வருஷத்துக்கு முன்னாடி என்னுடைய பல் ரொம்ப பெருசா இருக்கும், அதை சிவகுமாரிடம் சொல்லி எதாவது ஐடியா கொடுங்கன்னு கேட்டேன். அவர் ஒரு டாக்டர் பேர் சொல்லி அவரிடம் சென்று சரி செஞ்சுடுங்கன்னு சொன்னார். நானும் டாக்டரிடம் சென்று, கால்வாசி பல்லை அரைத்து எடுத்து விட்டேன். அதற்கு மேலேயும் எடுக்க சொன்னேன். ஆனால் டாக்டர் முடியாது என சொல்லிவிட்டார். பின்பு அதே பல்லோடு நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 250 படங்களுக்கு மேல் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் நலன் குமாரசாமி என் கதாபாத்திரத்துக்கு எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என பல்லை பெருசாக வைக்க சொன்னார். அதனால் பெரிய பல்லை வைத்து நடித்திருக்கிறேன். அப்பா பல்லை சின்னதாக்கினார். மகன் பெரிதாக்கிவிட்டார்” என்றார்.
Follow Us