ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியான படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியிருந்த இப்படம் கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய சசிகுமார், “ஒரு நல்ல இயக்குநரும் நல்ல தயாரிப்பாளரும் என்றைக்கும் தோற்று விடக்கூடாது. அதனால்தான் இந்த படத்திற்கு நான் இறங்கி எல்லா ஊர்க்கும் சென்று ப்ரமோஷன் செய்தேன்.
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு நிறைய பேர் பயந்துட்டாங்க. ஆனால் எனக்கு தைரியம் இருந்தது. ஒரு நல்ல படம் அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளும். இது எனக்கு அயோத்தி படத்திலிருந்து தெரிந்தது. அந்தப் படத்திற்கு முதல் வாரம் பெரிதாக போகவில்லை அடுத்தடுத்த வாரங்களில் தான் பெரிதானது அந்த மாதிரி இந்த படம் இருக்கும் என்பது என் நம்பிக்கை.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் சொல்வார், ஒவ்வொரு படமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று. அதேபோல் அயோத்தி படம் இங்குவந்து இறப்பவர்களுக்கு அவர்களது சொந்த ஊருக்கு உடலை எடுத்து செல்ல இரண்டு லட்சம் மானியம் கொடுத்தார்கள். அதேபோல் நந்தன் படம் அனைத்து ஊராட்சி மன்றங்களில் பட்டியல் சமூக தலைவர்கள் எந்த தடங்கலும் இல்லாமல் கொடி ஏற்ற உதவியது. அதேபோல் இந்த படமும் கிட்னி திருட்டை தடுக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/11-48-2026-02-18-19-19-58.jpg)