அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லாக்டவுன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சார்லி, நிரோஷா உள்ளிடடோர் நடித்துள்ளனர். இசையை பொறுத்தவரை என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விப்பின் ஆகியோர் கவனித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியாக திட்டமிட்டிருந்தது. ஆனால் கனமழைக் காரணமாக தள்ளிப் போவதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அதே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புது தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் சிறப்பு திரையிடலை பார்த்த திரை பிரபலங்கள் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இயக்குநர் அமீர், “சமூகத்துக்கு தேவையான ஒரு படம். பருவ வயதை அடைந்த பெண்கள் மற்றும் படிக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் படங்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் சசிகுமார், “பெண்கள் பெற்றோரிடம் எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டும் என்ற உணர்வை படம் முடிந்த பின்பு தோன்றுகிறது” என்றார். பாடகர் சினேகன், “மனது பாரமாக இருக்கிறது. எளிமையான கதையில் வலிமையான கருத்தை சொல்லி இருக்கிறார்கள். கண்டிப்பாக சமூகத்துக்கு தேவையான படம்” என்றார்.
Follow Us