Advertisment

“கலையுலகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால்...” - சரத்குமார் வைத்த கோரிக்கை

14 (31)

பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்பு சீவி’. இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார். உசிலம்பட்டி பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இப்படம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சரத்குமார், படம் குறித்து பேசியதோடு ஓடிடி வெளியீடு குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்த படத்தை எல்லாரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் தியேட்டரில் வந்து பார்க்கும் போதுதான் தனி மகிழ்ச்சி கிடைக்கும். ஓடிடி, சேட்டிலைட் என எல்லாம் இருந்தாலும் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வரவில்லை என்று பல டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் தியேட்டர் ஓனர்கள் சொல்லும்போது வேதனையாக இருக்கிறது. அதனால் ஓடிடிக்கு காத்திருக்காமல் அனைவரும் தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும்.

Advertisment

நாங்கள் படம் எடுத்தால் தான் நீங்கள் திரையிட முடியும். அதனால் இரண்டு பேருக்குமே ஒருவருக்கொருவர் தேவை. அதனால் 50 நாட்கள் கழித்து நீங்கள் ஓடிடியில் திரையிட்டால் சினிமா துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். வீட்டில் சோகமான நிகழ்வு நடந்தாலும் ஒரு நடிகராக இருந்தால் சிரித்துக் கொண்டே நடிக்க வேண்டும். அதனால் நடிகரின் சிரமம் உங்களுக்கு தெரியாது. எது நடந்தாலும் படம் உண்மையாக வரவேண்டுமென்று உழைப்பவர்கள் தான் கலைஞர்கள். கலைஞர்கள், தியேட்டர் ஓனர்கள், விநியோகிஸ்தர்கள் என எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஆடியன்ஸ் அனைவரும் ஓடிடியை எதிர்பார்க்காமல் தியேட்டருக்கு வர வேண்டும்” என்றார். இப்போது இருக்கும் சூழலில் ஓடிடி வெளியீடு திரையரங்க வெளியீட்டுக்குப் பின் 40 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

OTT sarathkumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe