Advertisment

“சாரி... சாரி...” - சிம்ரனின் பதிலால் அதிர்ந்து போன சரத்குமார்

425

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து வருபவர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமியும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதரிக்க இருக்கிறார். அதாவது, வரலட்சுமி தற்போது 'சரஸ்வதி' எனும் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார். இதில், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது. 

Advertisment

இது தொடர்பாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்தது. இதில் சிம்ரன் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிம்ரனிடம், பல ஆண்டுகள் கடந்தும் உங்கள் அழகு குறையாமல் இருக்க என்ன கரணம்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சிம்ரன், “உடற்பயிற்சி தான் காரணம் தினமும் நான்கு முறை உடற்பயிற்சி செய்கிறேன்” என்று கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரத்குமார், தினமும் நான்கு தடவை பயிற்சியா? என அதிர்ச்சியுடன் கேட்ட அவர், நெஞ்சில் கைவைத்துத் திகைத்து நின்றார். 

Advertisment

பின்னர், சிரித்துக் கொண்டே “சாரி சார்... சாரி சார்...”  வாரத்திற்கு நான்கு முறை தான் என சிம்ரன் கூற, அரங்கில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். உடற்பயிற்சி மற்றும் உடல் பராமரிப்பில் திரையுலகினருக்கு முன்னுதாரணமாக இருந்து வருபவர் சரத்குமார். அவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் சிம்ரன். 90-களின் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் தன்னிகரில்லா நட்சத்திரம் போல உச்சபட்ச நடிகையாக இருந்து வந்தவர் சிம்ரன். அவர் இப்போதும், உடல் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு உடற்பயிற்சி தான் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

sarathkumar simran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe