சென்னை திருத்தணியில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகர சம்பவம், தமிழ் நாடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கியுள்ளது. திருத்தணியில் ஓடும் ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில தொழிலாளர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி அத்துமீறி இருக்கின்றனர். அதை அந்த இளைஞர் விரும்பாத நிலையில், ரயில் நின்றவுடன் போதையில் இருந்த நான்கு பேரும் அந்த இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளனர். வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞரை சுற்றியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த விஷயம் தீயாய் பரவிய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது. குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, பிறந்த ஊரை விட்டு பிழைப்பிற்காக வந்துள்ள தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை அனைவரும் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நாம் பொறுப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த பத்தாண்டுகளாக நான் சென்னையில் வசித்து வரும் பகுதி, குறிப்பாக இரவில், போதைப்பொருட்களுக்கு அடிமையான குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. எனது ஸ்டுடியோ தளத்தில் பணிபுரியும் பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர்கள் சமீபத்தில் பலமுறை தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அத்தகைய குற்றவாளிகளில் ஒருவன், வரம்பை மீறி போதையில் இருந்ததால், காவல்துறை தடியடி நடத்தியபோதும் எந்த வலியும் இல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.
மேலும், இந்தத் தாக்குதல் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் பெருமைமிக்க இனவெறியர்களாகவும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை கண்மூடித்தனமாக வெறுத்துத் தாக்குபவர்களாகவும் இருக்கின்றனர். பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும், பல சாதி அடிப்படையிலான இயக்கங்களும், தங்கள் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் இந்த இளம் சிறுவர்களுக்கு ஆதரவாக ஓடி வருகின்றனர். இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தச் சம்பவங்களின் யதார்த்தங்களை நாம் ஏற்றுக்கொண்டு, இன்னும் யதார்த்தமாகச் செயல்பட்டு, பல பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா? திரையில் சித்தரிக்கப்படும் வன்முறைக்கும், சமீபத்தில் நடந்ததைப் போன்ற நிஜ சம்பவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நானும் உட்ப” என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/13-2025-12-31-18-36-31.jpg)