Advertisment

“ஊழலற்ற சமூகம்... அரசியல் மாற்றம்...” - சந்தோஷ் நாராயணனின் ஆசை

13 (9)

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. பிரனவ் முனிராஜ் இசையமைத்துள்ள இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

Advertisment

நிகழ்வில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் அவரது மிடில் கிளாஸ் நினைவுகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு மிடில் கிளாஸ் நினைவுகளே லேட்டா தான் வந்தது. ஏனென்றால் அவ்வளவு தரைமட்டத்தில் நான் இருந்தேன். ஒருமுறை பெங்களூருவில் ஒர்க் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் நான் விமானத்தில் போனதே கிடையாது. அதனால் விமானத்தில் தான் வருவேன் என சொன்னேன். அதற்கு அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. அதனால் பெங்களூர் போயிட்டு திருப்பி வந்து கொண்டிருந்தேன். எப்போதுமே நான் ஒரு சிடி கவரில் சில்லறை காசு வைத்திருப்பேன். ரொம்ப ஏழ்மையான சூழ்நிலையில் அதில் கை வைப்பேன். அதில் 200 ரூபாய் வைத்திருந்தேன். அதில் 50 செலவாகிவிட்டது. 

Advertisment

விமானத்தில் நான் வரும்போது குழுக்கள் முறையில் டிவியை ஜெயித்து விட்டேன். அதுக்கு வரி மட்டும் 300 சொன்னாங்க. நான் என் பர்ஸ மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லி கையில் இருந்த 150 ரூபாயை கொடுத்தேன். மிதமுள்ள 150 ரூபாயை அவங்களே போட்டு டிவியை கொரியர் அனுப்பிடுறோமுன்னு சொன்னாங்க. ஆனால் அந்த கொரியர் எனக்கு கிடைக்கவேயில்லை. ஏனென்றால் அப்போது அந்த கொரியர் வாங்க என்கிட்ட காசு இல்லை. என் போனிலும் ரீசார்ஜ் இல்லை. சென்னைக்கு வந்து கஷடப்படும் அனைவரும் அவர்களே அதை தேடிக்கொள்வது தான். ஏனென்றால் நாம் விருப்பப்பட்டு தானே வருகிறோம். ஆனால் அந்த சமயத்தில் போடும் உழைப்பு எதிர்காலத்தில் பலனளிக்கும். அதுக்காக காத்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அது கைகூடும் போது சிலர் அதிலிருந்து விலகி இஎம்ஐ விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். அதையும் தாண்டி அவர்கள் பிடித்த விஷயங்களை செய்யும் போதுதான் அவர்களுக்கு அந்த உழைப்புக்கான வெகுமதி கிடைக்கும். அந்த நிலைமையில் தான் இப்போது நான் இருக்கிறேன். 

சென்னை என்பது ஒரு பேங்க் மாதிரி அதில் லோன் வாங்கினால் தப்பித்துக் கொள்ளலாம். எனக்கு அமைந்த மாதிரி எல்லாத்துக்கும் அமைய வேண்டுமென்றால் ஊழலற்ற சமூகமாக நல்ல அரசியல் இங்கு அமைய வேண்டும். அதே போல் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார். 

politics santhosh narayanan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe