Advertisment

“வாழக்கா பஜ்ஜி போடுற மாதிரி...” - சைபர் க்ரைம் குறித்து சந்தானம்

362

சைபர் க்ரைம் தொடர்பான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் காவல் துறை அதிகாரிகளுடன் நடிகர் சந்தானமும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

Advertisment

நிகழ்வில் அவர் பேசுகையில், “சைபர் க்ரைம் விஷயம் இப்போது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. பேயை பார்த்து பயப்படுவதை விட ஏஐ பார்த்துத் தான் பயப்படுவதாக இருக்கு. என்னுடைய நண்பர் ஒருவர் மேட்ரிமோனியில் போட்டோ பார்த்துவிட்டு கல்யாணத்துக்கு அப்ளை பண்ணி கிஃப்ட்ஸ்லாம் வாங்கி கொடுத்து என்கேஜ்மெண்ட் லெவலுக்கு போய்விட்டார். ஆனால் அப்புறம் தான் தெரிந்தது அது ஏஐ என்று. இதை காதல் திருமண மோசடின்னு  சொல்றாங்க. முதலெல்லாம் வீடு புகுந்து திருடிட்டு இருந்தாங்க. இப்போ வீடியோ கால் மூலமா திருடுறாங்க. இதை டிஜிட்டல் கைதுன்னு பயமுறுத்துறாங்க. இதே போல நிறைய மோசடி சைபர் க்ரைமில் இருக்கு. இந்த க்ரைமை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். 

Advertisment

இந்த க்ரைம்யெல்லாம் நம்ம கையில இருக்கிற போன் மூலமாத்தான் ஆரம்பிக்குது. இந்த போனை வச்சிகிட்டு எல்லாரும் சும்மா இருக்குறதுல்ல. வாழக்கா பஜ்ஜி போடுற மாதிரி ஸ்வைப் பண்ணிக்கிட்டே இருக்கோம். அதனால ஏதோ ஒரு லிங்க் அனுப்பிச்சு நம்மள ஏமாத்துறாங்க. எனவே போனை ஜாக்கிரதையா யூஸ் பண்ணுங்க. நம்ம விழிப்புணர்வோட இருந்தா தான் சைபர் க்ரைமை குறைக்க முடியும்” என்றார். 

cyber crime actor santhanam,
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe