கவின் கடைசியாக மாஸ்க் படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது நயன்தாராவுடன் ஹாய் மற்றும் திங்க்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இன்னும் பெயிரிடப்படாத ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் திங்க்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் இருந்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க கென்ரேசன் இயக்கி வருகிறார். இசையை பொறுத்தவரை ஆஃப்ரோ என்பவர் இசையமைத்து வருகிறார். படத்தின் பூஜை கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்றது. இதையடுதது படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படும் நிலையில் தற்போது நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி இதில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஒரு முன்னோட்டத்துடன் ‘பாய்ஸ் ஆர் பேக்” என்ற வாசகத்துடன் குறிப்பிட்டுள்ளது.
சாண்டி, சமீப காலமாக நடிப்பில் மிரட்டி வரும் நிலையில் தமிழ், கன்னடம் மலையாளம் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரும் கவினும் பிக் பாஸில் விளையாடிய போது இருவரின் காம்போ பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த சூழலில் இருவரும் ஒரு படத்திற்காக இணைந்து இருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Follow Us