ஏ.எஸ் முகுந்தன் இயக்கத்தில் சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில் ஆனந்த்ராஜ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி’. இதில் முனீஸ் காந்த், தீபா, ஆராத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் நடிகை சம்யுக்தா பேசியதாவது, “தயாரிப்பாளர் அண்ணாதுரை சார் அதிகம் பேசி இன்று தான் கேட்டேன். அவர் மிக அமைதியான மனிதர். மிக நல்ல குணம் கொண்டவர், அவர் மனதுக்கு இப்படம் ஜெயிக்க வேண்டும். முகுந்தன் இப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் தாங்கியுள்ளார். ஆராதியா சொன்னது உண்மைதான். இன்று திரை வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு பிரச்சனையாக உள்ளது. கலர், மொழி, மட்டுமல்ல, திருமணம் ஆகியிருந்தால் நடிக்கக் கூப்பிடமாட்டார்கள். இது மாற வேண்டும்.
ஆனந்த்ராஜ் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் மிக ஜாலியானவர். எங்கள் எல்லோரையும் எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்வார். ஷகீலா மேடம் வேற லெவல் காமெடி செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா நல்ல இசையைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. படம் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
Follow Us