செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காந்தா’. இப்படத்தில் துல்கர் சல்மான் ‘டி கே மகாதேவன்’(நடிப்பு சக்ரவர்த்தி) என்ற கதாபாத்திரத்திலு சமுத்திரக்கனி ‘கோதண்டராமன்’(ஐயா) என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மான் உள்ளிட்ட இன்னும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜானு சாந்தர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டு வரும் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சமுத்திரக்கனி, “என்னுடைய பயணத்தை காந்தாவுக்கு முன் காந்தாவுக்கு பின் என மாற்றலாம். சுப்பிரமணியபுரம் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும்போது ஒரு உணர்வு இருந்ததோ அதே உணர்வு இந்த படத்துக்கும் இருக்கிறது. ஒரு சில படங்கள் நம்மளை தாண்டி ஒன்னு செய்யும் அது இந்த படம் செய்தது. இந்தப் படம் காலத்துக்கும் அழியாமல் இருக்கும். இதில் நான் இருப்பது எனக்கு பெருமை. போதும்டா... அப்படின்ற ஒரு மைண்ட் செட் வந்துருச்சு. அப்படி ஒரு படைப்பு.
நான் 2022ல் இந்த படத்தின் கதையை கேட்டேன். ஒரு சில கதைகள் நம்மளை சாப்பிட விடாமல் தூக்கத்தை கெடுக்கும். அப்படித்தான் இந்தக் கதை என்னை செய்தது. படத்தை சீக்கிரம் எடுத்திருங்கன்னு சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்தேன். ஆனால் ஷூட்டிங் தொடங்காமலே இருந்தாங்க. அதனால படத்துல இருக்குறனா, இல்லையான்னு சந்தேகமாக இருக்கும். உடனே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் போன் பண்ணி பேசுவேன் அவர்கள் ஐயா என்ன சொல்வார்கள் உடனே இருக்கிறதாக நம்பி விடுவேன். ஒவ்வொரு முறையும் மகாதேவன் என்று நான் உச்சரிக்கும் போது என் ஆத்மா அவ்வளவு மகிழ்ச்சியடையும். அவர் சொன்னார் நீங்க 2022 தானே, நான் 2019ல இருந்தே வெயிட் பன்றேன்னு சொன்னார். ரானாவை கேட்டால் 2016ன்னு சொல்றார். ஒரு படைப்பை நாம் இயக்குவது வேறு, ஆனால் ஒரு படைப்பு நம்மளை இயக்கும். அது தன்னை உருவாக்கிக் கொள்ள, நம்மை கஷ்டப்படுத்தும் காயப்படுத்தும் ஓடவிடும்... அதுதான் உண்மையான படைப்பு. அப்படி காந்தா படம் எங்களை எல்லாரையும் ஓடவிட்டது.
செல்வாவுக்கு இது முதல் படம் என்று சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. ஏன்னா செல்வா கிட்ட அவ்ளோ இருக்கு. அவர்கிட்ட நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். பல இலக்கணங்களை உடைத்தார். சினிமா மாறிக்கிட்டு இருப்பதை செல்வா மூலமாக உணர்ந்து கொண்டேன். அதை இப்போது, நான் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் பின்பன்றுகிறேன். அடுத்து நடிப்புச் சக்கரவர்த்தி(துல்கர் சல்மான்) அந்த வார்த்தையில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அவர் தகுதியானவர். படம் முடிந்து ஒரு வருஷம் ஆகியும் அவர்கிட்ட நான் பேசல. ஏன்னா போன் பண்ணுனா ரெண்டு பேரும் சார்னு கூப்பிடுமேன்னு பேசவே இல்ல. மகாதேவன் - ஐயா என்ற உறவு அப்படியே இருக்கட்டும்னு விட்டுவிட்டேன்.
நல்ல படைப்புகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு ராணா கண்டிப்பாக இருப்பார். செல்வாவை விட அதிகம் படம் பார்த்தவர் அவர்தான். அவர் ஒரு முறை என்னிடம் சொன்னார் ஒரு நல்ல படைப்பு கிடைப்பது கஷ்டம் அப்படி கிடைத்துவிட்டால் அதை எவ்வளவு தூரம் தூக்கிப் போக முடியுமோ தூக்கி கொண்டு போகணும், அதைத்தான் இப்போது நான் செய்கிறேன்னு முடித்தார். சினிமா மீது அதிக அன்பு கொண்டவர்களை சினிமா கைவிடாது. பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் சார் என்னிடம் ஒன்னு சொன்னார் அவருடைய 72 வது வயதில் என்னுடைய படத்தில் நடிக்க வரும்போது, உண்மையா இருந்தா சினிமா உன்ன விடாதுன்னு என்றார். அதே மாதிரி அவருடைய 92வது வயதில் அவரை ஒரு படத்திற்காக பார்க்கப் போகிறேன். அப்போது முன்பு சொன்னதை சொன்னார். மரணம் வரையிலும் சினிமா என்னை விடாது, உன்னை யாருமே பாக்கலன்னு கவலைப்படாத கேமரா உன்ன பாத்துட்டு இருக்கு அதனால உண்மையா இருந்திடுன்னு சொன்னார். அதைத்தான் இங்க இருக்கிற மொத்த பேருமே கடைப்பிடித்திருக்கோம்.
இந்தப் படத்துல நான் ஒண்ணுமே பண்ணல, என்னை தட்டி தேர்த்தினது டைரக்டர் தான். அதே மாதிரி என்னுடைய குருநாதர் கே.பி. சாரை நினைக்காத நாளில்லை. ஒவ்வொரு நாளும் மேக்கப் போட்டு வெளியில வரும்போதும் என்னுடைய குருநாதர் தான் என் மைண்ட்ல வருவாரு. அவரு தான் எனக்குள்ள இறங்கி பல நேரங்கள்ல வேலை பார்த்திருக்கிறார்னு நினைக்கிறேன். இதை அவருக்கான காணிக்கையாக பார்க்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/15-12-2025-11-06-15-54-57.jpg)