சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakt Brahmand) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘மா இண்டி பங்காரம்’(Ma inti bangaram) என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த மாதம் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் அவர் நடித்து வரும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை சமந்தாவின் கணவர் உருவாக்குகிறார். நந்தினி ரெட்டி இயக்கி வர சமந்தாவே தயாரிக்கிறார். இப்படத்தில் குல்ஷன் தேவையா, திகந்த், மூத்த நடிகை கௌதமி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு பேருந்தில் சண்டைக்கு தயாராவது போல் சமந்தா புடவையில் நிற்கிறார். இது அவருக்கு சரியான கம்- பேக்காக இருக்கும் என தெலுங்கு வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us