Advertisment

“வன்முறை இனி உடல் ரீதியாக மட்டும் நடக்காது” - பிரச்சாரத்தில் இணைந்த சமந்தா

06 (9)

பெண்களுக்கு எதிராக டிஜிட்டலில் நடக்கும் வன்முறையை எதிர்த்து ஐ.நா. மகளிர் இந்தியா கடந்த 25ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறது. ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில் நடக்கும் இப்பிரச்சாரம் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. 

Advertisment

இந்த பிரச்சாரத்தில் தற்போது நடிகை சமந்தா இணைந்துள்ளார். சமூக வலைதளத்தில் 37 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட சமந்தா, இந்த பிரச்சாரத்தில் இணைந்தது தொடர்பாக, “வன்முறை இனி உடல் ரீதியாக மட்டும் நடக்காது. இது திரையிலும் தொடரும். இதனால் நம் குரல்கள் மௌனமாக்கப்படுகிறது. நற்பெயர் அழிக்கப்படுகிறது. 

Advertisment

பொறுப்புணர்வோடு இருப்பதற்கும் சட்டப் பாதுகாப்புகளை வலுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு தவறான கருத்துக்கு பின்னால் ஒரு உண்மையான நபர் இருக்கிறார் என்பதை நினைவூட்டுவதற்கும் ஐநா மகளிர் இந்தியாவுடன் இணைந்ததில் நான் பெருமை கொள்கிறேன்” என்றார். 

samantha Ruth Prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe