பிரபல நடிகை சமந்தா சமீபகாலமாக இயக்குநர் ராஜ் நிதிமோரை காதலித்து வருவதாக ஒரு தகவல் உலா வந்தது. இதை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒன்றாக பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது.
முதலில் ராஜ் நிதிமோரும் சமந்தாவும் கடந்த பிப்ரவரியில் நடந்த உலக பிக்கல் பால் லீக் போட்டியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது சமந்தா, ராஜ் கையை பிடித்து கொண்டு நடந்து சென்றார். இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்டது. பின்பு இருவரும் திருப்பதி கோயிலில் ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு பல்வேறு இடங்களில் இருவரும் ஒன்றாக பயணித்தனர். சமந்தாவும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.இருப்பினும் இருவரும் பொதுவெளியில் மௌனம் காத்தே வந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/01/16-23-2025-12-01-15-13-55.jpg)
இந்த நிலையில் இருவருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது. கோவையில் எளிய முறையில் நடந்துள்ளது. திருமணப் புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்திருமணம் மணமக்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ல் திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு பிரிந்தார். அதே போல் இயக்குநர் ராஜ் நிதிமோரும் ஷ்யாமாலி என்ற பெண்ணை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து 2022ல் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ராஜ் நிதிமோர், தான் இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’, ‘சிட்டாடெல்’ உள்ளிட்ட வெப் தொடர்களில் சமந்தாவை நடிக்க வைத்திருந்தார். இப்போது சமந்தா லீட் ரோலில் நடிக்கும் ‘ரக்த் பிரம்மாந்த்’ வெப் தொடரை இயக்கி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/01/18-26-2025-12-01-14-10-18.jpg)