Advertisment

ட்ரோல்கள் குறித்து பதிலளித்த சமந்தா!

11 (52)

சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakt Brahmand) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘மா இண்டி பங்காரம்’(Ma inti bangaram) என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த மாதம் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்தார். 

Advertisment

இந்த நிலையில் அவர் நடித்து வரும் ‘மா இண்டி பங்காரம்’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை சமந்தாவின் கணவர் உருவாக்குகிறார். நந்தினி ரெட்டி இயக்கி வர சமந்தாவே தயாரிக்கிறார். மே 15ஆம் தேதி படம் வெளியாகிறது. சமந்தா கடைசியாக 2023ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘குஷி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் தயாரித்த ‘சுபம்’ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் திரும்புகிறார். 

Advertisment

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்த அவர், ‘சமூக ஊடகங்களில் வரும் கமெண்டுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “பாராட்டுகள் என்னை அசைக்காது. ட்ரோல்களும் அதே போல் தான். ஆனால் என் வீட்டிற்குள் நெகட்டிவிட்டியை கொண்டு வருபவரை நான் ப்ளாக் செய்வேன். எனது இடத்தை சுத்தமாக வைத்திருப்பது போலவே என்னுடைய பேஜையும் சுத்தமாக வைத்திருப்பேன். நான் பிளாக் செய்வதால் அவர்கள் என்னை பாதித்துவிட்டதாக அர்த்தமில்லை. அவர்கள் இங்கு வரவேற்கப்படவில்லை என்று அர்த்தம்” என்றார்.

social media samantha Ruth Prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe