Advertisment

ஏ.ஆர்.முருகதாஸை கிண்டல் செய்த சல்மான் கான்

495
சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் ‘சிக்கந்தர்’. சஜித் நதியாத்வாலா தயாரித்திருந்த இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களுக்கு பிரிதம் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கப் படத்தின் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணமாக சல்காம் கானின் லேட் வருகை தான் என ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் ஏ.ஆர்.முருகதாஸை சல்மான் கான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.  
Advertisment
இந்த் நிலையில் சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் சல்மான் கான், “சமீப காலங்களில் எந்த படத்திலும் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை. சிக்கந்தர் அப்படியான படம் என்கிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. படத்தின் கதை நன்றாக இருந்தது. நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன் என்றும் அது பிரச்சனையை உருவாக்கியதாகவும் இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால், என் விலா எலும்பு அந்த சமயத்தில் உடைந்திருந்தது. ஆனால் முருகதாஸ் அதன்பிறகு மதராஸி என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தின் நடிகர் 6 மணிக்குள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். அது பெரிய படம். சமீபத்தில் அப்படம் வெளியானது. அது சிக்கந்தரை விட மிகப்பெரிய பிளாக்பஸ்டர்” என அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். 
Advertisment
ஏ.ஆர்.முருகதாஸையும் மதராஸி படத்தையும் கிண்டலடிக்கும் விதமாக சல்மான் கான் பேசியது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்றும் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியான படம் கலவையான விமர்சனமே பெற்றதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Madharasi A.R. Murugadoss Salman Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe