சவுதி அரேபியாவில் ஜாய் ஃபோரம் 2025 நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்படத்துறையின் எதிர்கால வளர்ச்சி குறித்து உரையாடல் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான் உள்ளிட்ட மூவரும் கலந்துகொண்டு பேசினர். 

Advertisment

அப்போது அங்கு இந்திய திரைப்படங்களின் தாக்கம் குறித்து சல்மான் கான் பேசுகையில், “ஒரு இந்தி திரைப்படம் இங்கு வெளியிட்டால் அது சூப்பர் ஹிட்டாகும். ஆனால் ஒரு தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படங்களை வெளியிட்டால் அது நூற்றுக்கணக்கான கோடி வசூல் செய்கிறது. ஏனென்றால் மற்ற நாடுகளில் இருந்து பலர் எங்கு வந்துள்ளனர். பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வந்து வேலை பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார். இதில் பாகிஸ்தானில் இருக்கும் பலுசிஸ்தானை தனி நாடாக குறிக்கும் வகையில் அவர் பேசியிருந்தது விமர்சனத்தை எழுப்பியிருந்தது. பலுசிஸ்தான் மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சல்மான் கான் கருத்தை தனிநாடு கோரும் பலுசிஸ்தான் தலைவர்கள் வரவேற்றார்கள்.

Advertisment

அதே சமயம் சல்மான்கானின் கருத்து பாகிஸ்தான் மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. இதனால் சல்மான் கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் முழு கண்கானிப்பில் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் சமூக வலைதளங்களில் பாலுசிஸ்தான் அரசு சல்மான் கானை தடைசெய்யப்பட்ட நபர்கள் மற்றும் நான்காம் பட்டியலில் சேர்த்துவிட்டதாக ஒரு ஆவணத்தை பகிர்ந்து வந்தனர். இது பரபரப்பை கிளப்பியது. ஆனால் பாகிஸ்தான் அரசு இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு துறை, சல்மான் கான் பயங்கரவாத கண்காணிப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளது.