Advertisment

மீண்டும் ஹிட் காம்போ; தனுஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை

15 (56)

தனுஷின் 55வது படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பூஜையும் போடப்பட்டது. 

Advertisment

பின்பு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அடுத்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாகவும் நடிகை ஸ்ரீ லீலாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் அடுத்த நடிகை குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முன்னதாக வெளியான தகவல் போல் சாய் பல்லவி இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சாய் பல்லவி அமரன் படத்திற்கு பிறகு தமிழில் இப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் மீண்டும் நடிக்கிறார். இதனால் ஹிட் காம்போ மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதோடு தனுஷுடன் மாரி 2 படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கிறார். 

actor dhanush Rajkumar Periasamy sai pallavi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe