Advertisment

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது” - யோகி டா பட நிகழ்ச்சியில் சாய் தன்ஷிகா!

yogida

Sai Dhanshika speech at Yogi Da's film show

ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் ‘யோகி டா’. இந்த படத்தில் சாய் தன்ஷிகா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

Advertisment

இதில் படத்தின் கதாநாயகியான சாய் தன்ஷிகா பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் எனது பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது. நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்பதை படத்தில் காட்ட வேண்டும். கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம். கபாலி படத்திற்காக உண்மையாலுமே முடியை வெட்டினேன். ஆனால் இந்த படத்தில் விக் வைத்துள்ளேன். கபாலி படத்தின் போது நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பெண்கள் அந்த படத்திற்கு பிறகு தங்களது முடியை வெட்டிக் கொண்டனர். ஒரு படம் எந்த அளவிற்கு அனைவரையும் இம்பாக்ட் செய்கிறது என்பதை அன்று புரிந்து கொண்டேன். பெண்கள் தங்களது முடியை முக்கியமானதாக நினைப்பார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

Advertisment

இன்று நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகி வருகின்றன. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இது போன்ற ஒரு தருணத்தில் எங்களது படத்தை வெளிக்கொண்டு வரும் சிவ கணேஷுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோனிகா பிக்சர்ஸ் செந்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இசையமைப்பாளர் சிறப்பான பணியை செய்துள்ளார். பேராண்மை படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. இந்த படத்தின் அனைத்து ஆக்சன் காட்சிகளுக்கும் டூப் இல்லாமல் நானே செய்தேன்.

பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன் பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதைத் தாண்டி வர முடியும் என்பதை தான் யோகி டா படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு பெண்களுக்காக இந்த படத்தை எடுத்துள்ளோம். என்னால் முடிந்தவரை உழைப்பை கொடுத்து இந்த படத்தை உங்களுக்காக கொண்டு வருகிறேன். இது போன்ற படங்களை ஆதரிங்கள் நன்றி” என்று கூறினார். 

Movie sai dhansika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe