Advertisment

‘கருப்பு’ படத்திற்கு ஹைப் ஏற்றிய பிரபலம்!

11 (39)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 

Advertisment

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் அதே மாதமும் வெளியாகியிருந்தது. டீசரில் சூர்யா இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். அடுத்து படத்தின் முதல் பாடல் ‘காட் மோட்’ வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸ் நீண்டகாலமாக இழுபறியில் நீடிக்கிறது. படக்குழு பல்வேறு தேதிகளை புக் செய்தும் டிஜிட்டல் விற்பனையாகாததால் இந்த தாமதம் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது அது முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisment

பட ரிலீஸ் குறித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி படத்தின் இரண்டாவது பாடலுடன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதை எதிர்நோக்கி காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அத்கரிக்கும் விதமாக பட இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போது தான் கருப்பு படத்தின் இறுதி அவுபுட்டை பார்த்தேன். காத்திருப்பிற்கு படம் ஒர்த்தானது” எனது குறிப்பிட்டுள்ளார். 

actor suriya RJ Balaji Karuppu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe