எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தில் சான்வி, குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வைசாக் இசையமைத்திருந்த இப்படம் குடும்பஸ்தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கமல்ஹாசன், பா.ரஞ்சித் உள்ளிட்டவர்களின் பாராட்டை பெற்றது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதனையொட்டி பட நாயகி சான்ந்தி மகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் எனது பயணத்தை தெலுங்கில் தொடங்கினேன். அங்கு கிடைத்த அன்பிற்கு நான் எப்போதும் நன்றியுள்ளனாக இருப்பேன். ஆனால் குடும்பஸ்தன் படம் தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அப்படம் தான் எனது முதல் பிளாக் பஸ்டர். 

Advertisment

நான் 2016-ல் இருந்து நடித்து வருகிறேன். இந்த படம் நான் எதிர்பார்த்த அனைத்தையும் எனக்கு தந்தது. திரையரங்குகள் முதல் ஓடிடி-வரை தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு மேற்பட்டும் மக்களிடமிருந்து குறிப்பாக பெண்களிடமிருந்து நான் தொடர்ந்து பெரும் அன்பும் மரியாதையும் உண்மையிலேயே எனக்கு ஸ்பெஷலானது. இப்போது நான் இரண்டு படங்களில் நடிக்கிறேன். அது இரண்டும் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. இதுவும் ஒரு தொடக்கம் போல தான் இருக்கிறது” என்றார்.