அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் படம் சிறை. இப்படத்தில் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். இவரோடு விக்ரம் பிரபு, அனிஷ்மா, அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரம் பிரபுவுக்கு இது 25வது படம். இசை ஜஸ்டின் பிரபாகரன். இப்படத்திற்கு டாணாக்காரன் பட இயக்குநர் கதை எழுதி சுரேஷ் ராஜகுமாரியுடன் திரைக்கதையும் எழுதி இருக்கிறார். மேலும் உண்மை சம்பவ கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்துள்ளது. இதில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்
படத்தின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே தயாரிப்பாளர் லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
நிகழ்வில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில், “ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும். இவர் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவரும் ஆசைப்பட்டார் என நினைக்கிறேன். அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார்.
அக்ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம்.” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/23/10-38-2025-12-23-15-18-28.jpg)