பிரபல பின்னணி பாடகி ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா. இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். சென்னையை சேர்ந்த நடனக் கலைஞர் உமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக முரளி கிருஷ்ணாவும் உமாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Advertisment

தொடர்ந்து முரளி கிருஷ்ணா தனது அம்மாவின் பூர்விகமான ஹைதராபாத்தில் அவருடன் வசித்து வந்தார். ஆனால் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவரது மறைவு ஜானகி குடும்ப வட்டாரத்திலும் தெலுங்கு மற்றும் தமிழ் திரை வட்டாரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டி ஜானகிக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment