Advertisment

RMV THE KINGMAKER - ஆர்.எம். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் ஆவணப்படம்!

rmv-documentry

அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் "RMV The Kingmaker" ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது. ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருடன் பணியாற்றிய அவர், பின்னர் எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக இருந்தார். ஆர். எம். வீரப்பன் அய்யாவின் சேவை, ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது. அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

தயாரிப்பு நிறுவனங்கள்

இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யா சினிமா வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்த தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம்.

Advertisment

தயாரிப்பாளர்

அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் மகன் தங்கராஜ் வீரப்பன், தந்தையின் பாரம்பரியம், பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்த அன்பும் மரியாதையும்கொண்டு இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார். இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலி.

இயக்குநர்

ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம், உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்த படத்தை வடிவமைத்துள்ளார். அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன், மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும் நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய பலமாகும். ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு அருளாளர் வீரப்பன் அய்யா பிறந்த கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி பல முக்கிய தகவல்களை சேகரித்தது. மேலும் சினிமா, அரசியல், இலக்கியம், ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும் வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின் நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த்
ஆர். கண்ணன்
ஆர். சரத்குமார்
 சத்யராஜ்
கவிஞர் வைரமுத்து
ISRO விஞ்ஞானி நம்பி நாராயணன் மேலும் பல முக்கிய ஆளுமைகள்

ஆவணப்படம் பற்றி

"RMV The Kingmaker" என்பது ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல;தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர் ஆர். எம். வீரப்பன் அய்யாவின் அரிய பயணத்தை பதிவு செய்யும் வரலாற்று ஆவணப்படம்.அவரின் தலைமைக் குணம், நம்பிக்கை, திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர் செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.

documentary FLIM R.M.Veerappan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe