Advertisment

“ஏப்ரல் 10 கருப்பு ரிலீஸ் கிடையாது” - ஆர்.ஜே.பாலாஜி

357

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் அதே மாதமும் வெளியாகியிருந்தது. டீசரில் சூர்யா இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். அடுத்ததாக படத்தின் முதல் பாடல் ‘காட் மோட்’ வெளியாகியிருந்தது. ஆனால் பட ரிலீஸ் குறித்து நீண்டகாலமாக எந்த அறிவிப்பும் இல்லாமல் இழுபறியில் இருந்தது. படக்குழு பல்வேறு தேதிகளை புக் செய்தும் டிஜிட்டல் விற்பனையாகாததால் இந்த தாமதம் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisment

பட ரிலீஸ் குறித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி படத்தின் இரண்டாவது பாடலுடன் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். ஆனால் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து பட ரிலீஸ் குறித்து கடந்த மாதம் நடந்த ஒரு கல்லூரி நிகழ்வில், சம்மரில் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என தெரிவித்தார். இதனிடையே சமூக வலைதளத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி தான் இப்படம் வெளியாகும் என ஒரு தகவல் உலா வந்தது. 

Advertisment

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் பட ரிலீஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் வெயிட்டிங்கிற்கு வொர்த்தாக இருக்கும். இனிமேல் நான் நிறைய டைம் எடுத்துக்கிற ஐடியாவில் இல்லை. அதாவது இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாளில் செம்ம அப்டேட் வரும். அதில் ரிலீஸ் தொடர்பான எல்லா அப்டேட்டும் இருக்கும். ஆனால் கண்டிப்பாக ஏப்ரல் 10ஆம் தேதி படம் ரிலீஸ் கிடையாது. 

எனக்கும் தயாரிப்பாளருக்கும் சண்டை, இசையமைப்பாளருக்கும் சண்டை என சொல்றீங்க. எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் கொஞ்சம் கடுப்புல இருக்கீங்கன்னு. ரொம்ப நாள் வெயிட் பன்றது கடுப்பாகும், அதை நான் மதிக்கிறேன். ஆனால் என்னை நம்புங்க கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.  

Karuppu actor suriya RJ Balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe